மூன்றாம் வகுப்பு தமிழ் பாடம் 2: கண்ணன் செய்த உதவி Third Class Tamil Chapter 2: Help from Kannan

 மூன்றாம் வகுப்பு தமிழ்

பாடம் 2: கண்ணன் செய்த உதவி

Third Class Tamil Chapter 2: Help from 

Tamil Smart Class

Tamil Smart Class

கதிரவனின் ஒளி எங்கும் படர்ந்திருந்தது. பறவைகள் ஒலியெழுப்பிப் பறந்தன. காலை வேளையில் கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் செல்லும் வழியில் ஒரு பெரியவரைப் பார்த்தான். அந்தப் பெரியவர்"சாலையைக் கடக்க உதவ வேண்டும்" என்று அவனிடம் கேட்டார்.

Tamil Smart Class

"வாருங்கள் போகலாம்"

என்று கூறிய கண்ணன், அவரது கையைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக எதிர்ப்புறத்தில் விடுவதற்குச் சென்றான். அப்போது எதிரே ஒரு பேருந்து வேகமாக வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது உடனே கண்ணன் கத்தினான்

அறிந்த தகவல்களையும், செய்திகளையும் சரியான ஒலிப்புடன் தங்கு தடையின்றிக் கலவைத் தொடரில் பேசுதல்

என்ன செய்வது

என்று தெரியாமல் "ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று உரக்கக் கத்தினான், உடனே அந்தப் பெரியவர் தம் பையிலிருந்து செல்பேசியை எடுத்தார். பின் 108 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசினார். அடுத்த சிறிதுநேரத்தில் அவசர ஊர்தி வந்தது. காவலர்களும் வந்தனர். பேருந்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனைப் பார்த்த கண்ணன் பேருந்தில் இருந்தவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். அதன்பிறகு பள்ளிக்குச் சென்றான். ஆசிரியர் கண்ணனைப் பார்த்து"ஏன் தாமதமாக வருகிறாய்?" எனக் கேட்டார்.

Tamil Smart Class

கண்ணன் நடந்தவற்றைத் தெளிவாகக் கூறினான். ஆசிரியர் அவனைப் பாராட்டினார் கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.

Tamil Smart Class

"மாணவர்களே! நீங்களும் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். அதுவே மகிழ்ச்சியைத் தரும்" என்றார். மாணவர்கள் அனைவரும் கையைத் தட்டி கண்ணனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. கதிரவன்” இச்சொல் உணர்த்தும் பொருள் ……………..

A. சந்திரன்

B. சூரியன்

C. விண்மீன்

D. நெற்கதிர்

விடை : B. சூரியன்

2. “மகிழ்ச்சியடைந்தான்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

A. மகிழ்ச்சி + அடைந்தான்

B. மகிழ்ச்சி + யடைந்தான்

C. மகிழ்ச்சியை + அடைந்தான்

D. மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை : A.  மகிழ்ச்சி + அடைந்தான்

3. “ஒலியெழுப்பி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

A. ஒலி + யெழுப்பி

B. ஒலி + எழுப்பி

C. ஒலியை + யெழுப்பி

D. ஒலியை + எழுப்பி

விடை : B . ஒலி + எழுப்பி

II. சரியா? தவறா?

1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்.சரி
2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான்.தவறு
3. பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார்.தவறு
4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர்சரி

III. அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

Tamil Smart Class


1. ஒலிசத்தம்
ஒளிவெளிச்சம்
2. பள்ளிகல்வி கற்கும் இடம்
பல்லிஒரு சிறிய உயிரி
3.காலைசூரியன் உதிக்கும் நேரம்
காளைஎருது

IV. சரியான சொல்லால் நிரப்பிப் படி

Tamil Smart Class


(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)

1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது

2. அதன் கழுத்து நீளமாக இருக்கும்.

3. ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.

4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.

5. ஒட்டகச்சிவிங்கி இலைதழை களைத் தின்னும்.


V. சொல் விளையாட்டு

வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

Tamil Smart Class


நகைபுகை
சிரிப்புநடிப்பு
திரிப்புநகைப்பு

Post a Comment

Previous Post Next Post