மூன்றாம் வகுப்பு தமிழ் பாடம் 1: தமிழ் அமுது 3rd Standard Tamil Lesson - Tamil Amuthu

மூன்றாம் வகுப்பு தமிழ்

பாடம் 1: தமிழ் அமுது

3rd Standard Tamil 

Lesson - Tamil Amuthu

Tamil Smart Class,

Tamil Smart Class,


தமிழ் அமுது

தோண்டுகின்ற போதெல்லாம்

சுரக்கின்ற செந்தமிழே!

வேண்டுகின்ற போதெல்லாம் விளைகின்ற நித்திலமே!

உன்னைத் தவிர

உலகில் எனைக் காக்க

பொன்னோ! பொருளோ!

போற்றி வைக்க வில்லையம்மா!

- கவிஞர் கண்ணதாசன்

பாடல் பொருள் :

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா,


I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………

A. பவளம்

B. முத்து

C. தங்கம்

D. வைரம்

விடை : B. முத்து


2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

A. செம்மை + தமிழ்

B. செந் + தமிழ்

C. செ + தமிழ்

D. செம் + தமிழ்

விடை : A. செம்மை + தமிழ்


3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..

A. உன்னைத் தவிர

B. உனைத்தவிர

C. உன்னை தவிர

D. உனை தவிர

விடை : D.  உனைத்தவிர


II. பின்வரும் சொற்களின் பொருள் தருக 

சுரக்கின்ற​ – ஊறுகின்ற

நித்திலம் – முத்து

விரும்புகின்ற – வேண்டுகின்ற

போற்றி – பாதுகாத்து


III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?


தோண்டுகின்ற - வேண்டுகின்ற

ன்னைத் – பொன்னோ

காக்க – வைக்


IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.


விடைகள் :

1. பொன்பொருள்

2. வணங்கு

3. நித்திலம்

4. செந்தமிழ்

5. போற்றி

6. உலகில்


V.பேசிபழகு :

மீண்டும் மீண்டும் சொல்லலாமா?






படித்ததை மற்ற நண்பர் களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..!

நன்றி..!

By. Tamil Smart Class,

"""""""""""""""""""""""""""""""""""""""”

Tag: 

3rd Standard Tamil ,3rd Standard book Solution,Lesson -1. Tamil Amuthu,Tamil Smart Class,tamil notes,மூன்றாம் வகுப்பு தமிழ்,பாடம் 1: தமிழ் அமுது,தோண்டுகின்ற போதெல்லாம்,கவிஞர் கண்ணதாசன்

மூன்றாம் வகுப்பு தமிழ்

பாடம்1: தமிழ் அமுது


Post a Comment

Previous Post Next Post