ஆறாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம் இயல்ஒன்று 1.இன்பத்தமிழ்

ஆறாம் வகுப்பு
தமிழ் இயல்ஒன்று

1.தமிழ்த்தேன்  

1.இன்பத்தமிழ்

Tamil Smart Class,

Tamil Smart Class,

நுழையும்முன் :

இன்பத்தமிழ்

தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவிதங்களில் போற்றுகிறார். கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.


Tamil Smart Class,


பாடலின் பொருள் :

அமுதம் மிக இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது. 

அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. 

தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.

தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த

புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும். தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. 

இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது. 

தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோன் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

நூல் வெளி :

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார் எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார் இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

I. சொல்லும் பொருளும் :

1. நிருமித்த – உருவாக்கிய

2. விளைவு – விளைச்சல்

3. சமூகம் – மக்கள் குழு

4. அசதி – சோர்வு

5. சுடர் – ஒளி


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்

A. சமூகம்

B. நாடு

C. வீடு

D. தெரு

விடை : சமூகம்


2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்

A. மகிழ்ச்சி

B. கோபம்

C. வருத்தம்

D. அசதி

விடை : D. அசதி


3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________

A. நிலயென்று

B. நிலவென்று

C. நிலவன்று

D. நிலவுஎன்று

விடை : B. நிலவென்று


4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

A. தமிழங்கள்

B. தமிழெங்கள்

C. தமிழுங்கள்

D. தமிழ்எங்கள்

விடை : B. தமிழெங்கள்

5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

A. அமுது + தென்று

B. அமுது + என்று

C. அமது + ஒன்று

D. அமு + தென்று

விடை : B. அமுது + என்று

6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

A. செம்மை + பயிர்

B. செம் + பயிர்

C.செமை + பயிர்

D. செம்பு + பயிர்

விடை : A. செம்மை + பயிர்

III. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1. விளைவுக்குபால்
2. அறிவுக்குவேல்
3. இளமைக்குநீர்
4. புலவர்க்குதோள்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.

V. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக

1. பேர் – நேர்

2. பால் – வேல்

3. ஊர் – நீர்

4. வான் – தேன்

5. தாேள் – வாள்


VI. குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

பாரதிதாசன் தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர்களை சூட்டியுள்ளார்

2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?

நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம். காரணம் உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு

VII. சிறுவினா

1. இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

'தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.

அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.


VIII. சிந்தனை வினா

1. வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்ப டுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக.

வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.

வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.

அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.

அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார்.


IX. கூடுதல் வினாக்கள் :

A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ____________ அமுதென்று பேர்

A. தமிழிற்கு

B. தமிழுக்கு

C. தமிழுக்கும்

D. தமிழுக்கே

விடை : C. தமிழுக்கும்


2. தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது

A. தேன்

B. நெய்

C. நெல்

D. பால்

விடை :D.  பால்

3. தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது

A. அம்பு

B. கேடயம்

C. வாள்

D. வேல்

விடை : வேல்


4. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது

A. சாேறு

B. தேன்

C. நீர்

D. பால்

விடை : B.தேன்

5. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.

  1. அணிகலம்
  2. கவசம்
  3. வாள்
  4. வேல்

விடை : வாள்

6. “சுப்புரத்தினம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. இராமலிங்க அடிகளார்
  4. திருவள்ளுவர்

விடை : பாரதிதாசன்

7. “புரட்சிக்கவி, பாவேந்தர்” என்று போற்றப்படுபவர்

  1. பாரதிதாசன்
  2. கண்ணதாசன்
  3. அழ.வள்ளியப்பா
  4. கவிமணி

விடை : பாரதிதாசன்

8. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்

  1. தேசிய விநாயகம் பிள்ளை
  2. சுரதா
  3. வள்ளலார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

9. தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர் …………..

  1. பாரதியார்
  2. ஓளவையார்
  3. பாரதிதாசன்
  4. வள்ளலார்

விடை : பாரதிதாசன்

10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது

  1. அம்பு
  2. வானம்
  3. வாள்
  4. வேல்

விடை : வானம்

11. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் _____________ போன்றது

  1. தேன்
  2. தோள்
  3. நெல்
  4. பால்

விடை : தோள்

B. பொருத்துக

1. வாழ்வுக்குவாள்
2. உயர்வுக்குஊர்
3. கவிதைக்குவான்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

C. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன

விடை : தாய்மொழியைத்

2. _________________ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்

விடை : பாரதிதாசன்

3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் _________________ 

விடை : தமிழ்

D. சேர்த்து எழுதுக

  1. அமுது + என்று = அமுதென்று
  2. இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்
  3. மணம் + என்று =  மணமென்று

#.பிரித்து எழுதுக

  1. நிலவென்று = நிலவு + என்று
  2. புகழ்மிக்க = புகழ் + மிக்க
  3. சுடர்தந்த = சுடர் +தந்த

ஆறாம் வகுப்பு
தமிழ் இயல்ஒன்று

இயல் 1 : தமிழ்த்தேன்  

1.இன்பத்தமிழ் 



Post a Comment

Previous Post Next Post